ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டு படகுப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற விஎல்2 பிரிவு படகுப்போட்டியில் பிரச்சி வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
சீனாவில் அக்.22ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து 17 விளையாட்டுப் பிரிவுகளில் 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே இன்று படகுப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான படகுப்போட்டி
ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டில் ஆண்களுக்கான படகுப் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கவுரவ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
பிரச்சி யாதவின் கணவரான மணீஷ் கெளரவ் ஆண்களுக்கான (கேஎல்3 பிரிவு) படகுப்போட்டியில் வெண்கலம் வென்றார். இதேபோன்று விஎல்2 பிரிவில் நடைபெற்ற படகுப்போட்டிகளில் இந்தியாவின் கஜேந்திர சிங் வெண்கலம் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.