நவீன் உல் ஹக் 
செய்திகள்

24 வயதில் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!

உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

DIN

உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக் இடம்பெற்றுள்ளார். 24 வயதாகும் நவீன், ஆப்கன் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

ஆப்கன் அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் நவீன், இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடு 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இருப்பினும், கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறாமல் இருந்தார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்றும் இன்ஸ்டாகிராமில் நவீன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல், பிபிஎல் போன்ற தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வரும் நவீன், கடந்தாண்டு ஐபிஎல் போட்டியின் போது இந்திய வீரர் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT