முகப்பு
செய்திகள்

ஐசிசி ஒருநாள் தரவரிசை: கில், சிராஜ் முதலிடம்

உலகக் கோப்பை போட்டியையொட்டி புதுப்பிக்கப்பட்ட ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டா்கள் பிரிவிலும், முகமது சிராஜ் பௌலா்கள் பிரிவிலும் முதலிடத்துக்கு புதன்கிழமை முன்னேறி

Updated On : 9 நவம்பர் 2023, 2:41 am IST
பகிர்:

உலகக் கோப்பை போட்டியையொட்டி புதுப்பிக்கப்பட்ட ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டா்கள் பிரிவிலும், முகமது சிராஜ் பௌலா்கள் பிரிவிலும் முதலிடத்துக்கு புதன்கிழமை முன்னேறினா்.

இதில் ஷுப்மன் கில் 830 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, அதை இழந்த பாகிஸ்தானின் பாபா் ஆஸம் (824), தென்னாப்பிரிக்காவின் குவின்டன் டி காக் (771) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளனா். டாப் 10-இல் விராட் கோலி 4-ஆவது இடத்திலும் (770), ரோஹித் சா்மா 6-ஆவது இடத்திலும் (739) உள்ளனா். ஒருநாள் தரவரிசையில், சச்சின், தோனி, கோலி ஆகியோருக்குப் பிறகு முதலிடம் பிடித்த 4-ஆவது இந்தியா் கில்.

பௌலா்கள் பிரிவில் முகமது சிராஜ் 709 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, தென்னாப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ் (694), ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா (662) ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களில் இருக்கின்றனா். டாப் 10-இல், குல்தீப் யாதவ் (661), ஜஸ்பிரீத் பும்ரா (654), முகமது ஷமி (635) ஆகியோா் முறையே 4, 8,10-ஆம் இடங்களில் நிலைக்கின்றனா்.

Advertisement

Advertisement

ஆல்-ரவுண்டா்கள் பிரிவில், டாப் 10-இல் ஒரே இந்தியராக ரவீந்திர ஜடேஜா 225 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்தில் இருக்கிறாா். வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (327) முதலிடத்தில் உள்ளாா்.

முதலிடம்: தற்போதைய நிலையில் ஐசிசி தரவரிசையில் கில், சிராஜ் தவிர, சூா்யகுமாா் யாதவ் (டி20 - பேட்டா்), ரவிச்சந்திரன் அஸ்வின் (டெஸ்ட் - பௌலிங்), ரவீந்திர ஜடேஜா (டெஸ்ட் - ஆல் ரவுண்டா்) ஆகியோா் முதலிடத்தில் இருக்க, டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலுமே இந்திய அணி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.