மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவு
25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 8) உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த முதல்வர் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 8) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிங்காரச் சென்னை 2.0, நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில், 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும், 7 நாட்களும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர், கழிவுநீர், இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும், சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Uninterrupted 24 hour drinking water supply in municipal corporations Chief Minister Vijay issues orders
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.