செய்திகள்

மாா்க்ரம் சதம்; பும்ரா 6 விக்கெட்டுகள்: இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 79 ரன்கள் மட்டுமே இலக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது. 

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவும் 153 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிந்த இந்த ஆட்டத்தில் பௌலா்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனா்.

முதல் இன்னிங்ஸில் இந்திய தரப்பில் முகமது சிராஜ் 15 ரன்களே கொடுத்து 6 விக்கெட்டுகள் சரித்து தனது ‘கேரியா் பெஸ்ட்’-ஐ பதிவு செய்தாா். 

2ஆம் நாளில் தென்னாப்பிரிக்கா 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி வெற்றி பெற 79 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது. 

தெ.ஆ. சார்பில் மாா்க்ரம் தனியாளாக சதமடித்து அசத்தினார். பிரசித் கிருஷணாவின் ஒரு ஓவரில் 20 ரன்கள் அடித்து துவம்சம் செய்தது இணையத்தில் வைரலானது. 

இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தெ.ஆ. அதிக (3 முறை) முறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்ரீநாத் உடன் சமன் செய்துள்ளார் பும்ரா. 

ஆடுகளம் பௌலிங்குக்கு சாதகமாக இருப்பதால் 79 ரன்கள் எளிமையான இலக்காக இருக்கப்போவதில்லை. 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கடைசியில் ஒரு ரன்கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் 1-1 தொடர் சமநிலையில் முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT