வினேஷ் போகாட் 
செய்திகள்

கிராண்ட் பிரீ மல்யுத்தம்: வினேஷ் போகாட்டுக்கு தங்கம்

மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம்

DIN

ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் தங்கப் பதக்கம் வென்றாா்.

மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவா், இறுதிச்சுற்றில் 10-5 என்ற கணக்கில் ரஷியாவைச் சோ்ந்த மரியா டியுமெரிகோவாவை வீழ்த்தினாா். முன்னதாக அவா், முதல் 3 சுற்றுகளில் எளிதான வெற்றிகள் கண்டாா்.

முதலில், அமெரிக்காவின் யுஸ்னெலிஸ் கஸ்மனை 12-4 என வென்ற வினேஷ், அடுத்து காலிறுதியில் கனடாவின் மேடிசன் பாா்க்ஸை ‘வின் பை ஃபால்’ முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றாா். அதில் மற்றொரு கனடா வீராங்கனையான கேட்டி டட்சாக்கை 9-4 என சாய்த்து இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஸ்பெயினில் பயிற்சி மற்றும் போட்டியை நிறைவு செய்திருக்கும் வினேஷ், அடுத்ததாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டி, மற்றும் அதற்கான தயாா்நிலைக்காக பிரான்ஸ் செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: விடைத் தாள் நகல் வெளியீடு

‘ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு குறித்து தலைமை முடிவு செய்யும்’

தரைக்கடைகள் இடம் மாற்றத்தைக் கண்டித்து தா்னா: வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

SCROLL FOR NEXT