கிறிஸ்டியானோ ரொனால்டோ படம்: எக்ஸ் / போர்ச்சுகல்
செய்திகள்

1,000 கோல்கள் அடிப்பது சந்தேகமே..! மனம் திறந்த ரொனால்டோ!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் 1,000 கோல்கள் அடிப்பது குறித்து பேசியுள்ளார்.

DIN

போா்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் 900 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அடுத்தாண்டு பிப்ரவரியில் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

போா்ச்சுகல் அணியில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 கோல்கள் அடித்து அசத்தினார். அடுத்தாண்டு உடன் அல் நசீர் ஒப்பந்தமும் முடிவடையவிருக்கிறது. 2026 உலகக் கோப்பையிலும் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் போா்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பின் மிக உயரிய விருதான கியினாஸ் டீ பிளாட்டினா கோப்பை நேற்று வழங்கப்பட்டது.

மாறிக்கொண்டே இருக்கும் கனவு

இந்த நிகழ்ச்சியில் ரொனால்டோ பேசியதாவது:

18 வயதில் போா்ச்சுகல் தேசிய அணியில் சேர்ந்தேன். முதன்முதலாக சர்வதேச அணியின் தொப்பியை வாங்கவேண்டும் என்பதே கனவாக இருந்தது. பின்னர் 25, 50 கோல்கள் எனக் கடந்தேன்.

பின்னர், எனக்கு நானே ஏன் 100 கோல்கள் அடிக்கக் கூடாதென நினைத்தேன். ஒரு வீரருக்கு இந்த மைல்கள் மிகவும் முக்கியமாக இருக்கிறது. பின்னர், 150, 200 என நினைத்துக்கொண்டே சென்றேன். என்னைப் பொறுத்தவரை இது சிறந்த உணர்வு.

பல கோப்பைகளை வென்றாலும் தேசிய அணிக்காக விளையாடுவதுபோல் இருக்காது. இது தற்போது குறைந்துகொண்டே வருகிறது. சில வீரர்கள் போர்ச்சுகலை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட மறுப்பது வருத்தமளிக்கிறது.

போா்ச்சுகல் சிறிய நாடல்ல

போா்ச்சுகலை சிறிய நாடு என்கிறார்கள். இல்லை, என்னைப் பொறுத்தவரை பெரிய நாடு. நாம் அப்படித்தான் சிந்திக்க வேண்டும். பரப்பளவை வைத்து மதிப்பிடக்கூடாது. நம்மிடம் எல்லாமே இருக்கிறது.

நல்ல விளையாட்டு திடல்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் இருக்கிறார்கள், மற்ற விளையாட்டிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். நிச்சயமாக நாம் பெரிய நாடாக மாறுவோம்.

நான் எப்போதும் போா்ச்சுகல் அணிக்காக எல்லாவற்றையும் தருகிறேன். அவர்கள் அழைத்தால் எப்போதும் தயாராக இருப்பேன்.

1,000 கோல்கள் அடிக்காவிட்டாலும் நான்தான் சிறந்தவன்

நான் தற்போதைய கணத்தில் வாழ விரும்புகிறேன். இனிமேல் நீண்ட கால சாதனைகள் குறித்து சிந்திக்க முடியாது. முன்னதாக 1,000 கோல்கள் அடிப்பேன் எனக் கூறியதையும் தற்போது யோசிக்க முடியாது. ஆனால், எல்லாம் எளிமையானதாகவே தெரிகிறது. கடந்த மாதம்தான் 900 கோல்கள் அடித்தேன்.

நிகழ்காலத்தில் வாழ விரும்புகிறேன். எனது கால்கள் அடுத்த சில ஆண்டுகளில் விளையாட அனுமதி வழங்க வேண்டும். 1,000 கோல்கள் என்றால் சிறப்பாகத்தான் இருக்கும். அதி அடிக்க முடியாதென்றாலும் கவலையில்லை. நான்தான் ஏற்கனவே அதிக கோல்கள் அடித்தவர் வரலாற்றில் முதலிடத்தில் இருக்கிறேனே என்றார்.

அல் நசீர் அணியில் இந்த சீசனில் 15 போட்டிகளில் 10 கோல்கள் அடித்தார். உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் போா்ச்சுகல் அணிக்காகவும் விளையாடி வருவதால் இன்னும் சில கோல்களை எதிர்பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT