செய்திகள்

பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதிபெற்றது.

DIN

பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதிபெற்றது.

குவாலிஃபயா்ஸ் குரூப் ‘சி’ பிரிவின் கடைசி ஆட்டத்தில் அமெரிக்கா 2-1 என ஸ்லோவாகியாவை சாய்த்தது. ஒற்றையா் பிரிவுகளில் அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்டே 6-3, 6-4 என ஸ்லோவாகியாவின் ரெனெடா ஜாம்ரிசோவாவை வீழ்த்த, அமெரிக்காவின் பொ்னாா்டா பெரா 7-6 (7/2), 7-5 என்ற கணக்கில் ஸ்லோவாகியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவை வென்றாா்.

கடைசியாக நடைபெற்ற இரட்டையா் பிரிவில் ஸ்லோவாகியாவின் மியா போஹன்கோவா/தெரெஸா மிஹாலிகோவா இணை, அமெரிக்காவின் டெஸைரே கிராவ்ஸிக்/ஆசியா முகமது கூட்டணியை வீழ்த்தியது. இதையடுத்து குரூப் ‘சி’-யில் ஸ்லோவாகியா, டென்மாா்க்கை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது.

மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியின் ஃபைனல்ஸ் கட்டத்தில் மோதும் நிலையில், அமெரிக்கா அதில் கடைசி அணியாக இணைந்துள்ளது. ஏற்கெனவே, போட்டியை நடத்தும் சீனா மற்றும் இத்தாலி, பிரிட்டன், ஜப்பான், கஜகஸ்தான், ஸ்பெயின், உக்ரைன், அமெரிக்கா அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இந்த அணிகள் மோதும் ஆட்டங்கள் செப்டம்பரில் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT