கார்லோ அன்செலாட்டி படம்: ஏபி
செய்திகள்

தொடர் தோல்வி: ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகும் பயிற்சியாளர்!

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி அணியில் இருந்து விலகுவதாக இருக்கிறார்.

DIN

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரியல் மாட்ரிட் அணியில் கடந்த 2021 ஆண்டு, ஜூன்.1ஆம் தேதி பயிற்சியாளராகச் சேர்ந்த கார்லோ அன்செலாட்டியின் ஒப்பந்தம் 2026 வரை இருக்கிறது.

இந்நிலையில், ரியல் மாட்ரிட் அணியையை விட்டு வரும் ஜூன் மாதம் விலகுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கார்லோ அன்செலாட்டி தலைமையில் ரியல் மாட்ரிட் அணி 3 சாம்பியன்ஸ் லீக், 2 லா லிகா பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலகக் காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக ரியல் மாட்ரிட் அணி சுமாராகவே விளையாடி வருகிறது.

பார்சிலோனாவுடன் சமீபத்திய எல்-கிளாசிக்கோ போட்டிகளில் மோசமாக தோல்வியுற்றுள்ளது.

கடைசியாக விளையாடிய ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் மட்டும் ஓரளவுக்கு போராடியது.

இருப்பினும், சாம்பியன்ஸ் லீக் வெளியேற்றம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பயிற்சியாளர் யார்?

அமெரிக்காவில் ஜூன் மாதம் கிளப் உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் புதிய பயிற்சியாளரை நியமிக்க இருக்கிறார்கள்.

முன்னாள் ரியல் மாட்ரிட் வீரரும் லெவர்குசென் அணியின் பயிற்சியாளர் ஜெபி அலோன்சோவை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்லோ அன்செலாட்டியின் மோசமான திட்டமிடல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் இந்த மாற்றம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்லோ அன்செலாட்டி எங்கு செல்கிறார்?

ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகும் கார்லோ அன்செலாட்டி பிரேசில் தேசிய அணிக்கு பயிற்சியாளராக விருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக பிரேசில் அணி சரியாக விளையாடவில்லை. சமீபத்தில் ஆர்ஜென்டீனாவுடன் மோசமாக தோல்வியுற்றது. இதனால், அந்த அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவைப்படும் நிலையில் இருக்கிறது.

ஜூன் மாதம் பிரேசில் அணியில் கார்லோ அன்செலாட்டி இணைவதற்கான முடிவுகள் எடுத்துவிட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT