முதல் கோல் அடித்த மகிழ்ச்சியில் பிஎஸ்ஜி அணியினர்.  படம்: ஏபி
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பிஎஸ்ஜி முன்னிலை, ஆர்செனல் தடுமாற்றம்!

சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதியில் பிஎஸ்ஜி முன்னிலை வகிக்கிறது.

DIN

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் கட்ட அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி முன்னிலை வகிக்கிறது.

ஆர்செனல் அணியுடனான முதல் கட்ட அரையிறுதியில் பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியின் முதல் 4ஆவது நிமிஷத்திலேயே பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பேலே கோல் அடித்து அசத்தினார்.

கோல் அடித்த

முதல் பாதியின் கடைசி நேரத்தில் மீண்டெழுந்த ஆர்செனல் அணியினால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை.

பிஎஸ்ஜி அணியின் தடுப்பாட்டம் பலமாக இருந்ததால் ஆர்செனல் அணியினால் கோல் அடிக்கும் வாய்ப்பைப் பெரிதாக உருவாக்க முடியவில்லை.

போட்டியில் 53 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டிலே வைத்திருந்த பிஎஸ்ஜி அணி 85 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்தது.

இந்தப் போட்டியில் 70ஆவது நிமிஷத்தில் தசைப் பிடிப்பு காரணமாக வெளியேறியே டெம்பேலே-வுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

காயம் பெரியதாக இல்லை என அந்த அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் 2-ஆம் கட்ட போட்டி மே.7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்தம்... பிரியங்கா மோகன்!

பார்த்த மயக்கம்... ஜீவிதா!

தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 அமையும்: மு.க. ஸ்டாலின்

கண்ணே... கேத்திகா சர்மா!

பழம்பெருமைமிகு இந்தியா... மொழி மற்றும் கலைகளின் சிறப்பு! | Ancient India

SCROLL FOR NEXT