பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று ஆஸ்டன் வில்லா கால்பந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பதக்கத்தை வெல்லும் முனைப்புடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் நேற்றிரவு மோதிய ஆஸ்டன் வில்லா அணி 2-1 என அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்டன் வில்லா அணியின் மிட்ஃபீல்டரான மோர்கன் எலியட் ரோஜர்ஸ் 45, 57-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
யுனெனட் அணி சார்பில் குன்ஹா 45+3-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியில் எவ்வளவோ முயன்றும் யுனைடெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தில் பந்தினை 58 சதவிகிதம் யுனைடெட் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியலில் முன்னேற இரண்டு அணிக்குமே இந்தப் போட்டி முக்கியமானதாக இருந்தது.
இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்டன் வில்லா தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்தி, மூன்றாம் இடத்துக்கும் முன்னேறியுள்ளது.
பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்
1. ஆர்செனல் - 39 புள்ளிகள்
2. மான்செஸ்டர் சிட்டி - 37 புள்ளிகள்
3. ஆஸ்டன் வில்லா - 36 புள்ளிகள்
4. செல்ஸி - 29 புள்ளிகள்
5. லிவர்பூல் - 29 புள்ளிகள்
6. சன்டர்லேன்ட் - 27 புள்ளிகள்
7. மான்செஸ்டர் யுனைடெட் - 26 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.