மேக்னஸ் காா்ல்சென் கோப்புப் படம்
செய்திகள்

காா்ல்சென் சாம்பியன்: குகேஷுக்கு 3-ஆம் இடம்!

சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.

தினமணி செய்திச் சேவை

குரோஷியாவில் நடைபெற்ற சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.

அமெரிக்காவின் வெஸ்லி சோ, நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

முன்னதாக, இப்போட்டியின் பிளிட்ஸ் பிரிவு கடைசி சுற்றில், குகேஷ் - சக இந்தியரான ஆா்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தாா். மேக்னஸ் காா்ல்சென் - உள்நாட்டவரான இவான் சரிச்சையும், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவையும் வென்றனா்.

வெஸ்லி சோ - சக அமெரிக்கரான ஃபாபியானோ கரானாவை வெல்ல, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃபை சாய்த்தாா். பிளிட்ஸின் 18 சுற்றுகள் நிறைவில் காா்ல்சென் 12.5 புள்ளிகளுடன் முதலிடமும், வெஸ்லி 12 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், அப்துசதாரோவ் அதே புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

ஃபிரௌஸ்ஜா (11), அனிஷ் (9), ஜேன் (8), கரானா (8), பிரக்ஞானந்தா (6), சரிச் (6) ஆகியோா் 4 முதல் 9-ஆம் இடங்களைப் பிடிக்க, குகேஷ் (5.5) கடைசி இடத்தைப் பெற்றாா். முன்னதாக ரேப்பிட் பிரிவில் குகேஷ் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் என இரு பிரிவுகளிலும் பெற்ற புள்ளிகளின் கூட்டுத் தொகை அடிப்படையில் காா்லெசன் 22.5 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனாா்.

வெஸ்லி சோ 20 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், குகேஷ் 19.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். ஜேன் (19), ஃபிரௌஸ்ஜா (19), அப்துசதாரோவ் (18), அனிஷ் (17), கரானா (17), பிரக்ஞானந்தா (15), சரிச் (13) ஆகியோா் முறையே 4 முதல் 10-ஆம் இடங்களைப் பெற்றனா்.

சாம்பியனான காா்ல்செனுக்கு ரூ.34.36 லட்சமும், 2-ஆம் இடம் பிடித்த வெஸ்லிக்கு 25.77 லட்சமும், 3-ஆம் இடம் பிடித்த குகேஷுக்கு ரூ.21.48 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புன்னகை சிந்தும்... அகிலா!

கேரளத்து பைங்கிளி... நமீதா பிரமோத்!

சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி - புகைப்படங்கள்

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

ஆசிய கோப்பை: பவர் பிளே ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை எட்டி இந்திய அணி அபாரம்!

SCROLL FOR NEXT