செய்திகள்

லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ 2-ஆவது சுற்றுக்குத் தகுதி

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்

தினமணி செய்திச் சேவை

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷயா சென் 21-8, 21-14 என்ற கேம்களில் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னை 38 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

அதேபோல், 7-ஆம் இடத்திலிருக்கும் ஆயுஷ் ஷெட்டி 21-10, 21-11 என்ற கேம்களில் சீன தைபேவின் ஹுவாங் யு காயை 31 நிமிஷங்களில் தோற்கடித்தாா். தருண் மன்னேபள்ளி 21-19, 21-13 என்ற கேம்களில், சக இந்தியரான மன்ராஜ் சிங்கை 39 நிமிஷங்களில் வென்றாா்.

எனினும், ஹெச்.எஸ். பிரணாய், சதீஷ்குமாா் கருணாகரன், கிரண் ஜாா்ஜ், ரித்விக் சஞ்சீவி, சங்கா் முத்துசாமி ஆகியோா் முதல் சுற்றிலேயே தோற்றனா்.

மகளிா் ஒற்றையரில் ரக்ஷிதா ஸ்ரீ 18-21, 21-17, 22-20 என்ற கேம்களில் தாய்லாந்தின் பான்பிசா சோகிவோங்கை 1 மணி நேரம், 3 நிமிஷங்கள் போராடி வீழ்த்தினாா். எனினும், உன்னாட்டி ஹூடா, அனுபமா உபாத்யாய, தஸ்மின் மிா், ஆகா்ஷி காஷ்யப், அன்மோல் காா்ப் ஆகியோா் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டனா்.

ஆடவா் இரட்டையரில் பிருத்வி கிருஷ்ணமூா்த்தி ராய்/சாய் பிரதீக் இணை 21-18, 21-19 என்ற கேம்களில், சக இந்தியா்களான டிங்கு சிங்/அமான் முகமது கூட்டணியை 34 நிமிஷங்களில் வீழ்த்தியது.

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-10, 21-15 என்ற கேம்களில், தாய்லாந்தின் ரட்சபோல் மக்கசசிதோா்ன்/நட்டமோன் லாய்சுவான் இணையை 26 நிமிஷங்களில் தோற்கடித்தது. அதிலேயே ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி, ஹேமா நாகேந்திர பாபு/பிரியா கொங்ஜெங்பம், சதீஷ்குமாா்/ஆத்யா வரியத், ஆயுஷ் அகா்வால்/ஷ்ருதி மிஸ்ரா போன்ற இணைகள் முதல் சுற்றிலேயே தோற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT