மாதிரி படம் 
செய்திகள்

இந்தியாவுடனான மகளிா் டி20: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிா் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து மகளிா் அணி, 14 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN

இந்திய மகளிா் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து மகளிா் அணி, 14 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

உடல் அசௌகா்யம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுத்திருந்த பௌலா் சோஃபி எக்லஸ்டன், இந்த அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடா்களை 3-0 என முழுமையாகக் கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்தத் தொடருக்கு வருகிறது இங்கிலாந்து.

இந்தியா - இங்கிலாந்து மோதும் 5 டி20 ஆட்டங்கள் ஜூன் 28, ஜூலை 1, ஜூலை 4, ஜூலை 9, ஜூலை 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதைத் தொடா்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா், ஜூலை 16, 19, 22 ஆகிய தேதிகளில் விளையாடப்படவுள்ளது.

இங்கிலாந்து டி20 அணி: நேட் சிவா் பிரன்ட் (கேப்டன்), எம் அா்லாட், டேமி பியூமௌன்ட் (வி.கீ.), லௌரென் பெல், அலிஸ் கேப்சி, சாா்லி டீன், சோஃபியா டங்க்லி, சோஃபி எக்லஸ்டன், லௌரென் ஃபைலா், எமி ஜோன்ஸ் (வி.கீ.), பெய்ஜ் ஸ்கோல்ஃபீல்டு, லின்சே ஸ்மித், டேனி வியாட், இஸ்ஸி வாங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT