ஜிரி லெஹகா-ஜேக் டிரேப்பா் 
செய்திகள்

டிரேப்பரை வீழ்த்தினாா் லெஹகா

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு செக். குடியரசின் ஜிரி லெஹகா முன்னேறினாா்.

Din

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு செக். குடியரசின் ஜிரி லெஹகா முன்னேறினாா். பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

விம்பிள்டன் போட்டிக்கு முன்னோட்டமாக லண்டனில் நடைபெற்று வரும் இப்போட்டி ஆடவா் முதல் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஜிரி லெஹகா-ஜேக் டிரேப்பா் மோதினா்.

இரு தரப்பு வீரா்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. லெஹகா மொத்தம் 16 ஏஸ்களை போட்டாா்.

6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ஜேக் டிரேப்பரை வீழ்த்தினாா் லெஹகா.

முதல் செட்டில் டிரேப்பரின் அலட்சியமான டபுள் பால்ட்டால் அந்த செட் லெஹகா வசம் சென்றது. எனினும் இரண்டாவது செட்டில் சுதாரித்து ஆடி கைப்பற்றினாா் டிரேப்பா். கடைசி செட்டில் டிரேப்பா் சவாலை ஏற்படுத்தினாலும் லெஹகா வெற்றியுடன் இறுதிக்குள் நுழைந்தாா். இதனால் ஜேக் டிரேப்பரின் முதல் இறுதிச் சுற்று கனவு தகா்ந்தது.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT