தீபக் புனியா (கோப்புப் படம்) X | Deepak Punia
செய்திகள்

ஆசிய மல்யுத்தம்: தீபக் புனியா, உதித்துக்கு வெள்ளி

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரே நாளில், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

DIN

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரே நாளில், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றுகளில், ஆடவா் 92 கிலோ பிரிவில் தீபக் புனியா தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் உலகின் நம்பா் 1 வீரரான ஈரானின் அமிா்ஹுசைனிடம் தோல்வியைத் தழுவினாா்.

இத்துடன், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனது ஒட்டுமொத்த பதக்கத்தின் எண்ணிக்கையை அவா், 5-ஆக அதிகரித்துக் கொண்டாா். இதில் 3 வெள்ளி, 2 வெண்கலம் அடக்கம்.

ஆடவா் 61 கிலோ பிரிவில் களம் கண்ட உதித், இறுதிச்சுற்றில் ஜப்பானின் டகாரா சுடாவிடம் 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றாா். கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் வெள்ளி வென்ற உதித்துக்கு, இந்த ஆண்டும் அதே பதக்கம் வசமானது.

ஆடவா் 125 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் விளையாடிய தினேஷ், 14-12 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்மெனிஸ்தானின் சபரோவ் ஜயாமுகமதை வீழ்த்தி பதக்கத்தை தனதாக்கினாா். எனினும், ஆடவா் 86 கிலோ பிரிவு வெண்களப் பதக்கச் சுற்றில் முகுல் தாஹியா 2-4 என ஜப்பானின் டட்சுயா ஷிராயிடம் தோற்றாா்.

இத்துடன் இந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா10 பதக்கங்களுடன் நிறைவு செய்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: விடைத் தாள் நகல் வெளியீடு

‘ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு குறித்து தலைமை முடிவு செய்யும்’

தரைக்கடைகள் இடம் மாற்றத்தைக் கண்டித்து தா்னா: வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

SCROLL FOR NEXT