வெற்றிக் களிப்பில் ஊர்வலம் சென்ற பார்சிலோனா அணியினர்.  படம்: எக்ஸ் / பார்சிலோனா
செய்திகள்

ஓராண்டில் 3 கோப்பைகள்: ஊர்வலம் சென்ற பார்சிலோனா, 6 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பு!

பார்சிலோனா வீரர்கள் இந்த சீசனில் வென்ற 3 கோப்பைகளுடன் கொண்டாடியது குறித்து...

DIN

லா லீகா கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பார்சிலோனா வீரர்கள் கொண்டாட்டம் கவனம் ஈர்த்து வருகிறது.

லா லீகா கோப்பை ஸ்பெயின் நடைபெறும் முக்கியமான கால்பந்து தொடராகும்.

இதில் 36-ஆவது போட்டியில் விளையாடிய பார்சிலோனா அணி எஸ்பானியோல் 2-0 என வென்றதன் மூலம் லா லீகா கோப்பையை உறுதி செய்தது.

இது பார்சிலோனாவுக்கு 28-ஆவது லா லீகா சாம்பியன் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த சீசனில் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை, ஸ்பானிஷ் கோப்பை, லா லீகா என 3 கோப்பைகளையும் பார்சிலோனா அணி வென்றது.

லா லீகா தொடரில் வென்றதும் இந்தக் கோப்பைகளை தங்களது அணியின் பேருந்தில் வைத்துக்கொண்ட பார்சிலோனா அணியினர் ஸ்பெயினில் ஊர்வலமாகச் சென்றனர்.

பார்சிலோனா அணி வீரர்கள் மிகுந்த உற்சாகமாக இந்தக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினர்.

இந்தக் கூட்டதில் 6 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடையாக இல்லை: கரூரில் தொல். திருமாவளவன் பேட்டி

மைலாஞ்சி இசை, டீசர் வெளியீடு!

ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்: அட்லி

ராம் அப்துல்லா ஆண்டனி டிரெய்லர்!

தங்கம் விலை ரூ. 92,000! மாலையில் மேலும் ரூ. 600 உயர்ந்தது! வெள்ளி விலையும்...

SCROLL FOR NEXT