கோப்பையுடன் செல்ஸி வீரர்கள். படம்: ஏபி
செய்திகள்

ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து அணி: வரலாறு படைத்தது செல்ஸி!

செல்ஸி கால்பந்து அணி முதல்முறையாக கான்ஃபரன்ஸ் லீக் கோப்பையை வென்றது.

DIN

செல்ஸி கால்பந்து அணி முதல்முறையாக கான்ஃபரன்ஸ் லீக் கோப்பையை வென்றது.

கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் பெட்டிஸ், செல்ஸு அணிகள் போலந்தின் வ்ரோக்லாவ் திடலில் மோதின. இந்தப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதில் முதல் பாதியில் ரியல் பெட்டிஸ் 9ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது.

இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த செல்ஸி 65,70,83, 90+1ஆவது நிமிஷங்களில் தொடர்ச்சியாக கோல்களை அடித்தது.

இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பாவின் முக்கியமான 5 கோப்பைகளையும் கைப்பற்றிய முதல் அணியாக செல்ஸி எஃப்சி சாதனை படைத்துள்ளது.

1905ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செல்ஸி எஃப்சி கால்பந்து அணி இதற்கு முன்பாக 1971,98-இல் கப் வின்னர்ஸ் கப், 1998,2021-இல் சூப்பர் கப், 2013, 2019இல் ஐரோப்பிய லீக், 2012, 201-இல் சாம்பியன்ஸ் லீக்கையும் வென்றிருந்தது.

இதுவரை வெல்லாத கான்ஃபரன்ஸ் லீக் கோப்பையை இந்த சீசனில் வென்று ஐரோப்பாவின் முக்கியமான 5 கோப்பைகளையும் வென்ற முதல் அணியாக செல்ஸி வரலாறு படைத்துள்ளது.

ரஷியா - உக்ரைன் போரினால் கடந்த 2022இல் செல்ஸி கால்பந்து அணியை அமெரிக்காவைச் சேர்ந்த டாட் போஹ்லி வாங்கினார்.

அதிகமான ரிஸ்க் எடுக்கப்பட்டதாக பலரும் விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் எடுத்த முடிவை வரலாறாக மாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியா் தகுதித் தோ்வு: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக் கோரிக்கை

திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

தகவல் பலகையில் காா் மோதி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT