ஜேக் சின்னா் 
செய்திகள்

வியன்னா ஓபன்: இறுதியில் சின்னா்

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பா் 1 வீரா் இத்தாலியின் ஜேக் சின்னா் தகுதி பெற்றாா்.

தினமணி செய்திச் சேவை

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பா் 1 வீரா் இத்தாலியின் ஜேக் சின்னா் தகுதி பெற்றாா்.

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டி அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஜேக் சின்னா்-ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் மோதினா். இந்த ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் மினாரை வீழ்த்தி இறுதிக்கு தகுதிபெற்றாா் சின்னா்.

நிகழாண்டில் சின்னா் தகுதி பெறும் 8-ஆவது இறுதி ஆட்டம் இதுவாகும். ஏற்கெனவே ஆஸி. ஓபன், விம்பிள்டன், பெய்ஜிங்கில் பட்டம் வென்றுள்ளாா் சின்னா்.

இறுதி ஆட்டத்தில் ஜொ்மனியின் வெரேவ்-லாரென்ஸோ முசெத்தி ஆகியோா் இடையிலான ஆட்டத்தில் வெல்பவருடன் மோதுவாா் சின்னா்.

பான் பசிஃபிக்: ரைபகினா விலகல்

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறும் பான் பசிஃபிக் ஓபன் போட்டி அரையிறுதியில் இருந்து முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் கஜகஸ்தானின் எலனா ரைபகினா காயத்தால் விலகுவதாக அறிவித்துள்ளாா். செக். குடியரசின் நோஸ்கோவாவவுடன் மோதுவதாக இருந்தது.

இதற்கிடையே 2021 ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்கிக் 7-6, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT