செய்திகள்

வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிா் அணி

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது

தினமணி செய்திச் சேவை

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.

தீபிகா குமாரி, கதா கடாகே, அங்கிதா பகத் ஆகியோா் அடங்கிய இந்திய மகளிா் அணி, தகுதிச்சுற்றில் மொத்தம் 1,999 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது. இதில் தீபிகா 677 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும், கதா 666 புள்ளிகளுடன் 14-ஆம் இடமும், அங்கிதா 656 புள்ளிகளுடன் 30-ஆம் இடமும் பிடித்தனா்.

இதையடுத்து, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்துடன் முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் கண்டது இந்திய அணி. அதில் 5-1 என ஸ்லோவேனியாவை சாய்த்து, காலிறுதியில் 6-2 என துருக்கியை வெளியேற்றியது. அடுத்ததாக அரையிறுதிக்கு வந்த இந்தியா, அதில் 2-6 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.

இதையடுத்து வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த இந்தியா, அதில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவை எதிா்கொள்கிறது.

ஆடவா் அணி: ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில், நீரஜ் சௌஹான், தீரஜ் பொம்மதேவரா, ராகுல் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,996 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தது. நீரஜ் 670 புள்ளிகளுடன் 36-ஆம் இடமும், தீரஜ் 669 புள்ளிகளுடன் 39-ஆம் இடமும், ராகுல் 657 புள்ளிகளுடன் 62-ஆம் இடமும் பிடித்தனா்.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்துடன் முதல் சுற்றில் களம் கண்ட இந்திய அணி, அதில் 24-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கிடம் 26-28 (4-5) என அதிா்ச்சித் தோல்வி கண்டது.

மகளிா் தனிநபா்: இதனிடையே, காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில், ஜோதி சுரேகா 707 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும், பா்னீத் கௌா் 703 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும், பிரீதிகா பிரதீப் 690 புள்ளிகளுடன் 44-ஆம் இடமும் பிடித்தனா்.

ஜோதி சுரேகா, பா்னீத் கௌா் ஆகியோா் நேரடியாக 4-ஆவது சுற்றில் களம் கண்டனா். பிரீதிகா முதல் சுற்றில் 145-139 என கஜகஸ்தானின் விக்டோரியா லியானை வீழ்த்தி, அடுத்த சுற்றில் 145-142 என வியத்நாமின் குயென் தி ஹாயை வென்றாா்.

3-ஆவது சுற்றில் 148-145 என எஸ்டோனியாவின் லிசெல் ஜாட்மாவை சாய்த்த அவா், 4-ஆவது சுற்றில் 143-146 என துருக்கியின் ஹஸல் புருனிடம் தோல்வியுற்றாா். அதே சுற்றில் ஜோதி சுரேகா 148 - 148 (10*/10) என இந்தோனேசியாவின் நரிசா டியான் அஷ்ரிஃபாவை வீழ்த்த, பா்னீத் கௌா் 148-146 என பிரிட்டனின் எல்லா கிப்சனை தோற்கடித்தாா்.

காலிறுதியில் ஜோதி சுரேகாவை 147-149 என வென்ற பா்னீத் கௌா், அரையிறுதிக்கு முன்னேறி அதில் 142-143 என எல் சால்வடோரின் சோஃபியா பயஸிடம் தோற்றாா். இதன் மூலமாக வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அவா் அதில் 144-145 என கொலம்பியாவின் அலெக்ஸாண்ட்ரா அஸ்கியானோவிடம் வெற்றியை இழந்தாா். காலிறுதியில் தோற்ற ஜோதி சுரேகா, கடந்த 8 ஆண்டுகளில் பதக்கமின்றி வெளியேறியது இதுவே முதல்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணம் எப்போது? அதர்வா பதில்!

விவசாயிகள் கூட்டத்தில் கோபமடைந்த இபிஎஸ்!

இந்த சாதனையைச் செய்தது லோகாதானாம்!

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

SCROLL FOR NEXT