ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை குறித்து...
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் ஈஷா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.
தெலங்கானாவைச் சேர்ந்த ஈஷா சிங் (20 வயது) சீனாவில் நிங்போ விளையாட்டு திடலில் நடைபெற்ற மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் நட்சத்திர வீராங்கனை யாங் சியான்சூனைவிட 0.1 புள்ளி அதிகமாகப் பெற்று தங்கம் வென்றார்.
Advertisement
Advertisement
உலகக் கோப்பையில் இது ஈஷாவின் முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் பதக்கம் பெற்ற தென் கொரியாவின் ஒ யெஜின் வெண்கலம் வென்றார்.
ஈஷாவின் தங்கப் பதக்கத்தால் பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.
சீனா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
Olympian and reigning mixed team pistol world champion Esha Singh ended India's medal drought at the ISSF World Cup Rifle/Pistol, clinching gold in the women's 10m air pistol here on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.