ஹாங் காங் ஓபன் அரையிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்கள் சாத்விக் - சிராக் இணையினர் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தாண்டில் முதல்முறையாக இவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் ஓபன் பாட்மின்டன் ஆடவர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியரகள் சாத்விக் - சிராக் கூட்டணி, தைபேவின் பிங்-வீ லின் - சென் செங் கு பிரஸ் கூட்டணியுடன் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் 21-17, 21-15 என்ற நேர் கேம்களில் வென்றனர். இந்த சீசனில் 6 முறை அரையிறுதியில் தோற்ற சாத்விக் - சிராக் இணையர்கள் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
சாத்விக் - சிராக் இணையர் 2024ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபனில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கிற்குப் பிறகு சாத்விக் முழங்கை பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரியில் அவரது தந்தை இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.