ஹாங் காங் ஓபன் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் சாத்விக் - சிராக் இணையர்கள் தோல்வியுற்றனர்.
இந்த சீசனில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இவர்கள் தோல்வியைச் சந்தித்தது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹாங் காங் நகரில் நடைபெற்ற ஹாங் காங் ஓபன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணையர்கள் சீனாவின் டபிள்யூ.கே. லியாங் - சி.வாங் உடன் மோதினார்கள்.
61 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சீன இணையினர் 19-21, 21-14, 21-17 என்ற கேம்களில் வென்றார்கள்.
இதற்கு முன்பாக இவர்கள் சந்தித்த போட்டிகளில் 3-6 என சீனர்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தார்கள்.
தாய்லாந்து ஓபனை வென்ற இந்தியர்கள் 16 மாதங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு வந்தும் தோல்வியைச் சந்தித்தார்கள்.
இந்த சீசனில் 6 முறை அறையிறுதிக்கு முன்னேறி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.