SWAMINATHAN
செய்திகள்

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை, அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

தினமணி செய்திச் சேவை

சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை, அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வியுற்றார்.

முன்னதாக, ஆடவர் இரட்டையர் காலிறுதியில் போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்/சிராக் கூட்டணி 21-14, 21-14 என்ற நேர் கேம்களில் சீனாவின் ரென் யு ஜியாங்/ஜி ஹானோன் ஜோடியை 38 நிமிஷங்களில் வீழ்த்தியது.

அரையிறுதியில் இந்த இந்திய கூட்டணி, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் மலேசியாவின் ஆரோன் சியா/சோ வூய் யிக் இணையை எதிர்கொள்கிறது.

இதனிடையே மகளிர் ஒற்றையர் காலிறுதியில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து 14-21, 13-21 என்ற நேர் கேம்களில், உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருக்கும் தென் கொரியாவின் ஆன் செ யங்கிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டம் 38 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆன் செ யங்கை இத்துடன் 8-ஆவது முறையாக சந்தித்திருக்கும் சிந்து, அனைத்திலுமே தோல்வி கண்டுள்ளார். அண்மைக் காலமாக தடுமாற்றத்துடன் விளையாடி வரும் அவர், பல்வேறு போட்டிகளில் காலிறுதி அல்லது அதற்கும் முந்தைய சுற்றுகளிலேயே தோல்வி கண்டு வெளியேறி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

SCROLL FOR NEXT