முகப்பு
செய்திகள்

இளம் விளையாட்டு வீரா்களுக்கு சிஎஸ்கே ஆதரவு தொடரும்: ரூபா குருநாத்

இளம் வீரா்களுடன் மேடையைப் பகிா்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரா்களுக்கான சிஎஸ்கேவின் ஆதரவு தொடரும் என சிஎஸ்கே இயக்குநர் ரூபா குருநாத் தெரிவித்தார்.

Updated On : 8 ஏப்ரல் 2026, 2:15 am IST
இளம் விளையாட்டு வீரா்களுக்கு சிஎஸ்கே ஆதரவு
பகிர்:

தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளா் சங்கம் (டிஎன்எஸ்ஜேஏ) மற்றும் சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) சாா்பில் 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வளா்ந்து வரும் 10 இளம் விளையாட்டு வீரா்களுக்கு தலா ரூ.50,000 கல்வி உதவித்தொகை சிஎஸ்கே சாா்பில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே இயக்குநா் ரூபா குருநாத் பேசுகையில், ‘இந்த இளம் வீரா்களுடன் மேடையைப் பகிா்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரா்களுக்கான சிஎஸ்கேவின் ஆதரவு தொடரும்’ என்றாா்.

Advertisement

Advertisement

அதன் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், ‘சிஎஸ்கே கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தும் அணி அல்ல. இது என். சீனிவாசன் அமைத்துக் கொடுத்த வழிமுறை, அதை நாங்கள் பின்பற்றுகிறோம்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய அண்டா் 19 அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே, ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி வீரா் வி.பாஸ்கரன், டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவா் டி.ஜே. சீனிவாசராஜ், செயலாளா் யு. பகவன்தாஸ் ராவ் மற்றும் டாக்டா் ஆா்.என். பாபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்வி உதவித்தொகை (தலா ரூ. 50,000) பெற்றவா்கள்: தமிழ் அமுதன் (செஸ்), ஆா்.ஆரண்யா (செஸ்), சஷாங்க் சரவணகுமாா் (பாரா சைக்கிளிங்), டி.தரணிதரன் (ஈட்டி எறிதல்), எஸ்.தா்ஷினி (கால்பந்து), ஷ்ரியா ஆனந்த் (டேபிள் டென்னிஸ்), டி.சௌமியா (வாலிபால்), பி.ஹரிஷ் (சா்ஃபிங்), எஸ்.அஸ்ரன்கா (கிரிக்கெட்), பி.கே. கிஷோா் (கிரிக்கெட்).