ரஃபீனியாவின் சாபம் பலித்தது: இறுதிப் போட்டி தோல்வியால் அழுத அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள், ரசிகர்கள்!
ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற அத்லெடிகோ மாட்ரிட் குறித்து...
ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி பெனால்டியில் தோல்வியுற்றது.
இறுதிப் போட்டி சமனில் முடிந்ததால், ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது. ரியல் சொசைடாட் அணி 4-3 என பெனால்டியில் வென்றது.
கோபா டெல் ரே (ஸ்பானிஷ் கோப்பை) இறுதிப் போட்டியில் ரியல் சொசைடாட் அணி, அதெல்டிகோ மாட்ரிட் மோதின. இந்தப் போட்டி 2-2 என சமனில் முடிந்தது.
Advertisement
இந்தப் போட்டியில் ரியல் சொசைடாட் 1ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, லூக்மான் 19ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து சமன்படுத்தினார்.
பின்னர், 45+1அவது நிமிஷத்தில் மிக்கேல் ஒயர்சபல் கோல் அடித்து 2-1 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் 83ஆவது நிமிஷத்தில் ஜுலியன் அல்வரெஸ் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார்.
பின்னர், 20 நிமிஷம் கூடுதல் நேரத்துக்குச் சென்ற ஆட்டத்தில் இரு அணியினருமே கோல் அடிக்கவில்லை. அதனால், ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது.
பெனால்டியில் ஜுலியன் அல்வரெஸ், சோர்லோத் கோல் அடிக்க தவறிவிட்டார்கள். ரியல் சொசைடாட் அணி 4-3 என வென்றார்கள். இது அவர்களது நான்காவது ஸ்பானிஷ் கோப்பையாகும்.
தோல்விக்குப் பிறகு, அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள், ரசிகர்கள் அழுதனர். பார்சிலோனாவை வெளியேற்றிய இவர்களை நினைத்து அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.
ரஃபீனியா, “அடுத்த சுற்றில் வெளியேறுவீர்கள்” எனக் கூறியதைக் குறிப்பிட்டு பார்சிலோனா ரசிகர்கள் இந்தத் தோல்வியைக் கொண்டாடி வருகிறார்கள்.
Sociedad beats Atletico on penalties to win Copa del Rey, madrid players and fans crying, barca fans happy