நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்று, தொடரை 2-1 என கைப்பற்றியது.
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்று, தொடரை 2-1 என கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் சேர்க்க, நியூஸிலாந்து 44.5 ஓவர்களில் 210 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீசத் தயாரானது. வங்கதேச பேட்டிங்கில் அதிகபட்சமாக, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் விளாசி வீழ்ந்தார்.
Advertisement
Advertisement
லிட்டன் தாஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 76 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
இதர வீரர்களில், சைஃப் ஹுசைன் 0, தன்ஸித் ஹசன் 1, செüம்யா சர்கார் 18, கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 22, ஷோரிஃபுல் இஸ்லாம் 1, தன்வீர் இஸ்லாம் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனர்.
ஓவர்கள் முடிவில், தெüஹித் ஹிருதய் 33, முஸ்டாஃபிஸýர் ரஹ்மான் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து பெüலர்களில் வில்லியம் ஓ' ரூர்க் 3, பென் லிஸ்டர், ஜேடன் லெனாக்ஸ் ஆகியோர் தலா 2, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 1 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் நியூஸிலாந்து இன்னிங்ஸில் டீன் ஃபாக்ஸிகிராஃப்ட் 7 சிக்ஸர்களுடன் 75, நிக் கெல்லி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் விளாசி, வெற்றிக்காக முயற்சித்து வெளியேறினர்.
ஹென்றி நிகோல்ஸ் 4, வில் யங் 19, கேப்டன் டாம் லாதம் 5, முகமது அப்பாஸ் 25, ஜாஷ் கிளார்க்சன் 6, நேதன் ஸ்மித் 2, ஜேடன் லெனாக்ஸ் 2, வில்லியம் ஓ'ரூர்க் 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தனர்.
முடிவில் பென் லிஸ்டர் 2 ரன்களுடன் கடைசி வீரராக நின்றார். வங்கதேச பெüலர்களில் முஸ்டாஃபிஸýர் ரஹ்மான் 5 விக்கெட்டுகள் கைப்பற்ற, நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2, ஷோரிஃபுல் இஸ்லாம் 1 விக்கெட் வீழ்த்தினர்.
105 ரன்கள் விளாசிய வங்கதேசத்தின் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ ஆட்டநாயகன் விருதையும், 3 ஆட்டங்களிலுமாக 8 விக்கெட்டுகள் சாயத்த நஹித் ராணா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
Bangladesh Vs New Zealand 3rd ODI Highlights: Bangladesh Win By 55 Runs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.