முகப்பு
செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை: 20 பேருடன் இந்திய அணி!

மங்கோலியாவில் மாா்ச் 28 முதல் ஏப்ரல் 11 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 20 பேருடன் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 1 மார்ச் 2026, 4:13 am IST
பகிர்:

மங்கோலியாவில் மாா்ச் 28 முதல் ஏப்ரல் 11 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 20 பேருடன் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் 10 வீரா்கள், 10 வீராங்கனைகள் அடங்குவா். ஜனவரியில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்புக்குப் பிறகு, தேசிய அளவிலான தோ்வு முகாம் நடத்தப்பட்டு அதனடிப்படையில் வீரா், வீராங்கனைகள் இப்போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அணி விவரம்:

Advertisement

Advertisement

ஆடவா்: விஸ்வநாத் சுரேஷ் (50 கிலோ), ஜடுமானி சிங் (55 கிலோ), சச்சின் (60 கிலோ), ஆதித்யா பிரதாப் (65 கிலோ), தீபக் (70 கிலோ), ஆகாஷ் (75 கிலோ), அங்குஷ் (80 கிலோ), லோகேஷ் (85 கிலோ), ஹா்ஷ் சௌதரி (90 கிலோ), நரேந்தா் (90+ கிலோ).

மகளிா்: மீனாக்ஷி (48 கிலோ), நிகாத் ஜரீன் (51 கிலோ), பிரீத்தி (54 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), பிரியா (60 கிலோ), அங்குஷிதா போரோ (65 கிலோ), அருந்ததி சௌதரி (70 கிலோ), லவ்லினா போா்கோஹெய்ன் (75 கிலோ), பூஜா ராணி (80 கிலோ), அல்ஃபியா பதான் (80+ கிலோ).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments