முகப்பு
செய்திகள்

கேப் வெர்டேவின் பெருமை... மெஸ்ஸியுடனான சந்திப்பு குறித்து கோல்கீப்பர் நெகிழ்ச்சி!

ஆர்ஜென்டீன கேப்டன் மெஸ்ஸியிடம் பேசியது பற்றி கேப் வெர்டே கோல்கீப்பரின் பேட்டி...

Updated On : 4 ஜூலை 2026, 5:48 pm IST
லியோனல் மெஸ்ஸி, ஹோசின்யா. - படம்: எக்ஸ் / ஃபிஃபா
பகிர்:

ஆர்ஜென்டீன கேப்டன் லியோனல் மெஸ்ஸியிடம் பேசியது பற்றி கேப் வெர்டே கோல்கீப்பரின் பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

லியோனல் மெஸ்ஸி கேப் வெர்டே வீரர்களை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் நாங்கள் மிகவும் சவலான ஆட்டத்தை அளித்ததாகவும் கோல்கீப்பர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மிகச் சிறிய தீவு நாடான கேப் வெர்டே இந்த உலகக் கோப்பையில் அறிமுகமாகி அனைவரையும் மூக்கின்மேல் விரல் வைக்கும்படி விளையாடினார்கள். குறிப்பாக அதன் கோல்கீப்பர் ஹோசின்யா (40 வயது) கால்பந்து ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றார்.

Advertisement

Advertisement

ஒரு மில்லியனுக்கும் குறைவான ஃபாலோயர்களை வைத்திருந்த இவருக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது 20 மில்லியன் ஃபாலோயர்கள் வந்தடைந்துள்ளார்கள்.

ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் 2-3 எனத் தோல்வியுற்றது. இருப்பினும் கூடுதல் நேரம் வரைக்கும் சென்ற இந்தப் போட்டியில் ஹோசினியா 8 கோல்களை தடுத்து அசத்தினார். போட்டிக்குப் பிறகு மெஸ்ஸியைச் சந்தித்து தான் பேசியது என்னவென்று கூறியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

போட்டிக்குப் பிறகு மெஸ்ஸியிடம் சென்றேன். அவர் என்னைக் கட்டியணைத்து, “நீங்கள் சிறந்தவர். உங்கள் நாட்டு மக்கள் உங்களை நினைத்து பெருமைப்பட வேண்டும்” என்றார். எனக்கு இது நம்பமுடியாததாக இருந்தது.

மெஸ்ஸியிடம் இருந்து இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்கும்போது அது எனக்கு மிகவும் பெரியது. நான் அவருக்கு நன்றி சொன்னேன். ’நன்றி லியோ. நீங்கள்தான் சிறந்தவர்’ என அவரிடம் கூறினேன். பிறகு, நாம் ஆடையை மாற்றிக்கொள்ளலாமா எனக் கேட்டேன். பேட்டிக்குப் பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்றார். இதுமாதிரியான தருணங்கள் இதயத்தில் எப்போதும் அழியாமல் இருக்கும் என்றார்.

summary

cape verde Goalkeeper Vozinha reveals Lionel Messi told him, 'Your people should be proud of you'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments