முகப்பு
செய்திகள்

உலக சாதனையுடன் ஆட்ட நாயகன் விருது..! மெஸ்ஸியின் பேட்டி!

உலகக் கோப்பை 2026ல் இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்றபிறகு மெஸ்ஸி பேசியிருப்பதாவது....

Updated On : 23 ஜூன் 2026, 3:12 pm IST
கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோ மெஸ்ஸி. - படம்: ஏபி
பகிர்:

ஆஸ்திரியாவுக்கு எதிரான கால்பந்து உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி தனது இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.

இந்தப் போட்டியில் 2 கோல்கள் (39’, 90+5’) அடித்த மெஸ்ஸி கால்பந்து உலகக் கோப்பையின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா 2-0 என அசத்தல் வெற்றி பெற்றது. இத்துடன் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு மெஸ்ஸி பேசியிருப்பதாவது

Advertisement

Advertisement

கேள்வி: 2 போட்டிகளில் 5 கோல்கள் அடித்து, ஆர்ஜென் டீன மக்களிடன் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது எப்படி இருக்கிறது?

பதில்: மகிழ்ச்சி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட வெற்றியினாலே இந்த மகிழ்ச்சி. மிகவும் கஷ்டப்பட்டு வென்றது. இந்தப் போட்டி மிகவும் அதிதீவிரமாக நடைபெறுமென எங்களுக்குத் தெரியும். சிறிய தவறுக்குட செய்ய முடியாது, ஏனெனில் அவர்கள் தீவிரத்துடன் விளையாடினார்கள். நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி. 6 புள்ளிகள் பெற்றது முக்கியமானது. அடுத்த வாரம் நாங்கள் சற்று நிம்மதியாக இருக்கலாம்.

கேள்வி: க்லோஸின் சாதனையை முறியடித்து எப்படி இருக்கிறது? திட்டமிட்டதா? அல்லது திட்டமிட்டதை விட சிறப்பாக செல்கிறதா?

பதில்: நிச்சயமாக, இரண்டு போட்டிகளை வெல்ல வேண்டும் என்பது எங்களது திட்டமாக இருந்தது. கடைசிமுறை சொன்னதுபோல யாரும் உங்களுக்கு எதுவும் தரமாட்டார்கள். இன்றும் அதைப் பார்த்தோம். தீவிரமான போட்டி. நீண்ட நேரமாக பந்தை எங்கள் வசம் வைத்துக்கொள்ள சிறமப்பட்டோம். ஆனால், அதற்காக நாங்கள் கவலையாகவில்லை. போட்டி தீவிரமாகச் சென்றது.

அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறவே நினைக்கிறோம். நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வனாது மகிழ்ச்சி.

கேள்வி: இந்த நிலைமையில் நீங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சிறப்பானதாக இருக்கிறது. 5 கோல்கள் அடித்து, சாதனை படைத்துள்ளீர்கள். இவையெல்லாம் உங்களுக்கு தெரியுமா? பிடித்த கோல் எது?

பதில்: நாங்கள் அணியாக எப்போது, எங்கு விளையாடினாலும் நன்றாக விளையாடுகிறோம். தினமும் பயிற்சில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எதிரணி யாராக இருந்தாலும் நாங்கள் ஒரே மாதிரி விளையாடுகிறோம்.

நல்ல தருணங்கள் கொடுத்த கடவுளுக்கு நன்றி. இதைத் தொடர வேண்டும். ரசிகர்கள் போலவே நாங்களும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

எனக்கு பல கோல்கள் மறந்துவிட்டன. எனக்கு சாதனைகள் முக்கியமல்ல; அணி வெல்ல வேண்டும். களைப்பாக இருக்கிறேன். அணியினருடன் சேர்ந்து மகிழ வேண்டும் எனக் கூறினார்.

summary

Here's what Lionel Messi said after his historic World Cup showing in North Texas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments