FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

7 போட்டிகளில் 5 ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி!

கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றது குறித்து...

Updated On : 16 ஜூலை 2026, 11:40 am IST
ஆட்ட நாயகன் விருதுடன் மெஸ்ஸி. - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா கடைசி 5 நிமிஷத்தில் முதல் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தியது. பின்னர், ஸ்டாப்பேஜ் நேரத்தில் மற்றுமொரு கோல் அடித்து 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 55ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்து அணியின் கோர்டான் கோல் கணக்கைத் தொடங்கினார். பின்னர், லியோனல் மெஸ்ஸி கடைசி 14 நிமிஷங்களில் ஆட்டத்தை மாற்றினார்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் மெஸ்ஸி 2 அசிஸ்ட்டுகளைச் செய்தார். பல வாய்ப்புகளை உருவாக்கி அசத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுவரை இந்த உலகக் கோப்பையில் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி ஐந்தாவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.

மொத்தமாக உலகக் கோப்பையில் 12 அசிஸ்ட்டுகளைச் செய்து முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் மட்டும் 8 கோல்கள், 4 அசிஸ்ட்டுகளை செய்துள்ளார்.

summary

Lionel Messi fifth man of the match in 2026 World Cup tournament

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments