FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... புதிய வரலாறு படைத்த மெஸ்ஸி!

எம்எல்எஸ் தொடரில் புதிய வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி குறித்து...

6 செப்டம்பர் 2026, 12:55 pm IST
லியோனல் மெஸ்ஸியிடம் பந்தை ஒப்படைக்கும் டி பால். - படம்: ஏபி
பகிர்:

இன்டர் மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் புதிய வரலாறு படைத்துள்ளார். மூன்று சீசன்களிலும் 30 கோல்களில் பங்காற்றியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி இன்றைய அதிகாலை போட்டியில் அட்லாண்டா யுனைடெட் உடன் மோதியது.

இந்தப் போட்டியில் 2-2 என சமனில் முடிந்தது. இதில் லியோனல் மெஸ்ஸி 32ஆவது நிமிஷத்தில் ஒரு அசிஸ்ட் செய்து அசத்தினார். இந்த அசிஸ்ட்டுடன் 12 அசிஸ்ஸ்டுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Advertisement

Advertisement

நடப்பு சீசனில் 18 கோல்கள், 12 அசிஸ்ட்டுகள் அடித்து 30 கோல்கள் பங்களிப்பில் இணைந்துள்ளார். இத்துடன் மூன்று சீசன்களிலும் 30 கோல் பங்களிப்பில் ஈடுபட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

லியோ மெஸ்ஸி 2025 சீசனில் 29 கோல்கள், 19 கோல்கள் 48 கோல் பங்களிப்பு செய்தார். 2024 சீசனில் 20 கோல்கள், 16 அசிஸ்ட்டுகளுடன் 36 கோல் பங்களிப்பையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் எம்எல்எஸ் கோப்பையை வென்ற மெஸ்ஸி தங்கக் காலணி விருதும் வென்றார். இந்த சீசனிலும் விருது வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. நாஷ்வில்லி முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் மெஸ்ஸி கோல் அடிக்க முயன்றும் அட்லாண்டா சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்கள்.

மெஸ்ஸியின் புள்ளி விவரங்கள். - படம்: எக்ஸ் / எம்எல்எஸ்
summary

Lionel Messi makes history in first game since Argentina retirement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments