FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

4 கோல்கள், 1 அசிஸ்ட்; மெஸ்ஸியின் மாஸ்டர்கிளாஸ்..! இன்டர் மியாமி மிகப்பெரிய வெற்றி!

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அபாரமான ஆட்டம் குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி. - படம்: ஏபி
பகிர்:

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் (39 வயது) அபாரமான ஆட்டத்தினால் இன்டர் மியாமி அணி 7-1 என மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

எம்எல்எஸ் தொடரிலன் இன்றைய ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் மான்ட்ரியல் அணியுடன் அதிகாலையில் மோதியது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 40, 52, 83, 90+6ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்து மிரட்டினார். அத்துடன் 80ஆவது நிமிஷத்தில் லூயிஸ் சௌரஸுக்கு மெஸ்ஸி ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.

Advertisement

Advertisement

இந்த நான்கு கோல்களில் இரண்டு கோல்கள் ஃபிரி கிக் மூலம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஃபிரி கிக் கோல்களைப் பார்க்கும்போது பிரைம் மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்ப்பதுபோல் இருப்பதாக வர்ணனையாளர்கள் கூறினார்கள்.

இந்தப் போட்டியில் மெஸ்ஸியைத் தவிர்த்து லூயிஸ் சௌரஸ், காசிமிரோ, அலெக்சான்டர் ஷா கோல் அடித்து உதவினார்கள். மான்ட்ரியல் அணி சார்பாக 37ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 55 சதவிகித நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அடித்த 18 ஷாட்டுகளில் 12 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. 591 பாஸ்களில் 91 சதவிகித துல்லியத்துடன் பந்தை பாஸ் செய்து இன்டர் மியாமி அணியினர் அசத்தினார்கள்.

summary

4 goals, 1 assist; Messi's masterclass...! A massive win for Inter Miami!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments