FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாஷ்வில் அணிக்கு எதிராக கோல்: எம்எல்எஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை படைக்க காத்திருக்கும் மெஸ்ஸி!

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி - நாஷ்வில் அணிகள் மோதிய போட்டி குறித்து...

13 செப்டம்பர் 2026, 11:44 am IST
கோல் அடித்த மகிழ்ச்சியில் மெஸ்ஸி - படம்: ஏபி
பகிர்:

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி - நாஷ்வில் அணிகள் மோதிய போட்டி 2-2 என சமனில் முடிவடைந்தது. டாப் 2வில் இருக்கும் இரண்டு அணிகள் மோதிய இந்தப் போட்டி மிகுந்த சுவாரசியமாகச் சென்றது.

இன்டர் மியாமியின் சொந்த திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியைப் பார்க்க 26,603 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். இந்த சீசனில் இன்டர் மியாமிக்கு இது 9ஆவது டிரா என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 62ஆவது நிமிஷத்தில் 20 அடி தூரத்தில் இருந்து தனது இடது காலினால் கோல் அடித்தார். பின்னர் பலமுறை இலக்கை நோக்கி அடித்தும் அது கோலாக மாறாமல் அந்த அணியின் டிஃபெண்டர்களும் கோல்கீப்பரும் தடுத்து விட்டார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணியினர் 59 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம்வைத்திருந்தார்கள். 92 சதவிகித துல்லியத்துடன் 546 பாஸ்களை செய்து அசத்தினார்கள்.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+1’) நாஷ்வில்லி அணியினர் கோல் அடித்து போட்டியை சமனில் முடித்தனர். இந்தப் போட்டி சமனில் முடிந்ததால் இரண்டு அணிகளுக்குமான முதலிடத்துக்கான வித்தியாசம் அப்படியே தொடர்கிறது.

இந்த கோல் உடன் மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் 99 கோல்களை நிறைவு செய்துள்ளார். அதிவேகமாக 100 கோல்களை அடித்தவராக விரைவில் புதிய சாதனை படைக்கவிருக்கிறார். இந்தப் போட்டியிலேயே அதற்கான வாய்ப்பு அமைந்தும் அது நடைபெறாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

summary

MLS: Messi scores but Inter Miami playout 2-2 draw against Nashville

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments