மெஸ்ஸி முயற்சிகள் வீண்: முதலிடத்துக்கான ஆட்டத்தில் தோல்வியுற்ற இன்டர் மியாமி!
எம்எல்எஸ் தொடரில் முதலிடத்துக்கான ஆட்டத்தில் தோல்வியுற்ற இன்டர் மியாமி அணி குறித்து...
எம்எல்எஸ் தொடரில் முதலிடத்துக்கான ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி 1-4 என்ற கோல் கணக்கில் நாஷ்வில் அணியிடம் தோல்வியுற்றது.
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு அவரது தந்தை மறைவு என அவருக்கு படிப்படியாக சோகமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. லீக்ஸ் கோப்பையில் இருந்தும் இன்டர் மியாமி அணி வெளியேறியது.
எம்எல்எஸ் தொடரில் சப்போர்டர்ஸ் ஷீல்டு மற்றும் எம்எல்எஸ் கோப்பை வெல்ல இப்போதும் இன்டர் மியாமி அணிக்கு வாய்ப்பிருக்கிறது. அதன்படி முதலிடத்துக்கான முக்கியமான ஆட்டத்தில் நாஷ்வில் அணியுடன் இன்று அதிகாலை 6 மணிக்கு மோதியது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் முதல் பாதியில் 1-1 என சமநிலையில் இருந்தது. முதல் பாதியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் மெஸ்ஸி ஓர் அசிஸ்ட் செய்து அசத்தினார். பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட அந்த அணியினர் செய்த தவறால் கோல் கணக்கில் வராமல் சென்றது.
மெஸ்ஸி பலமுறை பந்தை பாஸ் செய்து அசத்தினாலும் அந்த அணியினர் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. குறிப்பாக அணியின் டிஃபென்ஸ் பலவீனமாக இருந்தது. கோல்கீப்பரும் தேவையின்றி கோல்களை விட்டு சொதப்பினார்.
எம்எல்எஸ் கிழக்கு அணிகளின் புள்ளிப் பட்டியல்
1. நாஷ்வில் - 43 புள்ளிகள்
2. இன்டர் மியாமி - 38 புள்ளிகள்
3. நியூ இங்கிலாந்து - 30 புள்ளிகள்
4. சிகாகோ - 29 புள்ளிகள்
5. சார்லட் எஃப்சி - 28 புள்ளிகள்
6. சின்சினாட்டி - 27 புள்ளிகள்
Leo Messi's efforts in vain: Inter Miami defeated in match for the top spot!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.