FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எம்எல்எஸ்: நடப்பு சீசனில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் சாதனை குறித்து...

10 செப்டம்பர் 2026, 2:17 pm IST
இன்டர் மியாமி அணியினர்; நடுவில் மெஸ்ஸி. - படம்: ஏபி
பகிர்:

எம்எல்எஸ் தொடரில் நடப்பு சீசனில் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். சிகாகோ உடனான இன்றைய போட்டி 1-1 என சமனில் முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் சிகாகோ அணியின் ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி 10ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற வைத்தார். முதல் பாதி வரைக்கும் இதே நிலை தொடர்ந்தது.

இரண்டாம் பாதியில் 48ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி தனக்குக் கிடைத்த கார்னர் கிக்கில் சிறந்த அசிஸ்ட்டை செய்ய, காசிமிரோ தனது தலையினால் கோல் அடித்தார். இந்த சீசனில் காசிமிரோ ஹெட்டரின் மூலமாக அடித்த மூன்றாவது கோல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டி சிகாகோவின் சோல்டர் ஃபீல்ட் திடலில் நடைபெற்றது. இதனைப் பார்க்க 63,094 பேர் திடலுக்கு வந்திருந்தார்கள்.

எம்எல்எஸ் தொடரில் இந்த சீசனில் மட்டுமே 13 அசிஸ்ட்டுகளை செய்து முதலிடம் பிடித்துள்ளார். மொத்தமாக 423 அசிஸ்ட்டுடன் உலக அளவில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்எல்எஸ் தொடரில் கோல்கள் பட்டியலிலும் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார். தொடர்ச்சியக மூன்று சீசன்களிலும் 30 கோல் பங்களிப்பு செய்தவராக சாதனை புரிந்திருந்தார்.

7 போட்டிகளாக தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் சமனில் முடிவடைந்துள்ளது. இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறது.

எம்எல்எஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மெஸ்ஸி - எம்எல்எஸ் இணையதளம்
summary

Messi's league-high 13th assist sets up Casemiro for equalizer as Inter Miami ties Fire 1-1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments