அதிவேகமாக 100 கோல்கள்: எம்எல்எஸ் தொடரில் வரலாறு படைத்த லியோ மெஸ்ஸி!
எம்எல்எஸ் தொடரில் வரலாறுச் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி குறித்து...
எம்எல்எஸ் தொடரில் அதிவேகமாக 100 கோல்கள் அடித்தவராக இன்டர் மியாமி அணியின் லியோனல் மெஸ்ஸி (39 வயது) வரலாறுச் சாதனை படைத்துள்ளார்.
இன்டர் மியாமி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்று முதல்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது.
எம்எல்எஸ் மற்றும் லிகா எம்எக்ஸ் சாம்பியன்களுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் க்ரூஸ் அஜுல் அணி எதிராக இன்டர் மியாமி தனது சொந்த மண்ணில் மோதியது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்தினார். ஆட்ட நாயகன் வென்ற மெஸ்ஸி, எம்எல்எஸ் தொடரின் வரலாற்றிலேயே அதிவேகமாக 100 கோல்கள் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக எம்எல்எஸ் தொடரில் 125 போட்டிகளில் ஜோசப் மார்டினெஸ் 100 கோல்களை அடித்திருந்தார். இன்டர் மியாமிக்காக மெஸ்ஸி 115 போட்டிகளில் 100 கோல்கள், 56 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார்.
மொத்தமாக இதுவரை லியோனல் மெஸ்ஸி 929 கோல்கள், 424 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மெஸ்ஸி கடைசியாக ஒருமுறை தேசிய அணியில் விளையாடவிருப்பதாக நேற்று (செப்.16) அறிவிக்கப்பட்டது.
Fastest to 100 goals: Lionel Messi makes history in the MLS!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.