ஒரு பேரே வரலாறு... மெஸ்ஸியின் ஓய்வுக்கு ஐசிசி தலைவர் வாழ்த்து!
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வு குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியிருப்பதாவது...
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா, “வரலாற்றின் ஒரு பகுதியைக் குறிக்கும் அளவிற்கான சர்வதேச பயணம் முடிவுக்கு வந்துள்ளது” என மிகவும் பெருமையுடன் கூறியுள்ளார்.
ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் லியோ மெஸ்ஸி (39 வயது) இனிமேல் சர்வதேச போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்றும் இளைஞர்களுக்கு வழிவிடுவதாகவும் நேற்றிரவு (ஆக.31) இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.
ஆர்ஜென்டீன கால்பந்து அணிக்கு ஆக. 2005 முதல் ஆக.2026 வரை 21 ஆண்டுகள் விளையாடியுள்ளார். கடந்த 2022ல் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். 2026 உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறிச்சென்று ஸ்பெயினிடம் 0-1 என அவரது தலைமையிலான ஆர்ஜென்டீனா தோல்வியுற்றது.
Advertisement
Advertisement
ஆர்ஜென்டீனாவிற்கு அதிக கோல்கள் (125) அடித்தவராக இருக்கும் மெஸ்ஸி இந்தாண்டு கொல்கத்தா, ஹைதராபாத், தில்லிக்கு ‘கோட் டூர் 2026’ என்ற பயணத்தில் வந்திருந்தார். அவரைப் பார்க்க கொல்கத்தா சால்ட் திடலில் கட்டுக்கடந்தா கூட்டம் கூடியது. அவருக்காக சிலை வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா மெஸ்ஸிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வரலாற்றின் ஒரு பகுதியைக் குறிக்கும் அளவிற்கான சர்வதேச பயணம் முடிவுக்கு வந்துள்ளது. நீங்கள் இந்தியாவிற்கு வந்திருந்தபோது களத்தில் மட்டுமல்ல பொதுவெளியிலும் உங்களது அளவிட முடியாத தன்னடக்கம் உங்களைச் சந்தித்தபோது பிரதிபலித்தது.
தனிப்பட்ட முறையில் எங்களது மூவண்ண நிறக் கொடியை உங்களுக்கு அளித்தது கால்பந்து - கிரிக்கெட் இணைவுக்கான பெருமைமிகு தருணமாக உணர்கிறேன்.
நினைவுகளுக்கு நன்றி மெஸ்ஸி. உங்களது அடுத்த கட்ட பயணத்தில் சிறந்தே நடக்க வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார். கால்பந்து உலகக் கோப்பையின் போது ஒரு பேரே வரலாறு என ஃபிஃபா போஸ்டர் வெளியிட்டது. தற்போது அதே கருத்தை ஐசிசி தலைவரும் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
An era-defining international journey comes to an end Jay shah post Messi retirement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.