FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லமின் யமால் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்... மெஸ்ஸி புகழாரம்!

ஸ்பெயின் கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் லமின் யமால் குறித்து மெஸ்ஸி கூறியிருப்பதாவது...

Updated On : 18 ஜூலை 2026, 8:25 pm IST
லமின் யமால், மெஸ்ஸி. - படங்கள்: ஏபி, ஃபிஃபா உலகக் கோப்பை.
பகிர்:

ஸ்பெயின் கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் லமின் யமால் (19 வயது) ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி, “அவர் மிகச்சிறந்த வீரர்” எனக் கூறியுள்ளார்.

39 வயதான மெஸ்ஸியுடன் அன்று களத்தில் மோதப்போகும் 19 வயதான யமால், மிகச் சரியாக 19 ஆண்டுகளுக்கு முன் மெஸ்ஸி கையில் குழந்தையாகத் தவழ்ந்தவர் என்ற அதியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா நாளை இரவு மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்பாக மெஸ்ஸியின் பேட்டி குறித்து:

Advertisement

Advertisement

யமால் உலகத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அதனால், அவருக்கு நல்லது நடக்க வாழ்த்துகிறேன். அவருக்கு 19 வயதுதான் ஆகிறது, அவருக்க சிறப்பான வருங்காலம் அமைய வாழ்த்துகள்.

நானும் யமாலும் இருக்கும் அந்த சிறுவயது புகைப்படம் மிகவும் அதிசயமானது. யமால் குழந்தையாகவும், தற்போது இருவரும் விளையாட இருக்கிறோம். மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

நான் லமின் யமாலைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் வெற்றி பெற நானும் விரும்புகிறேன். அவரது வெற்றி பார்சிலோனாவின் வெற்றியாக மாறும். ஆனால், நாளை ஒருநாள் மட்டும் அவரை சிறப்பாக விளையாடாமல் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டுன் என்றார்.

மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் 2018 உடன் பிரிந்து சென்றார். அவருக்குப் பிறகு லமின் யமால் அந்த அணியில் மெஸ்ஸி அளித்த நம்பிக்கையை பலருக்கும் அளித்து வருகிறார்.

summary

Lionel Messi makes bold Lamine Yamal claim before World Cup final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments