ஸ்பெயினைப் பார்த்துதான் பிரான்ஸ் பயப்படும்: லாமின் யமால்
அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் லாமின் யமால் பேட்டி குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதியில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன. இந்த நிலையில், ஸ்பெயினின் லாமின் யமால், “எங்களைப் பார்த்துதான் பிரான்ஸ் பயப்படும்” எனக் கூறியுள்ளார்.
மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸும் பெல்ஜியத்தை வீழ்த்தி ஸ்பெயினும் அரையிறுதிக்கு முன்னேறியது. இரு அணிகளும் அரையிறுதியில் வரும் ஜூலை 15ஆம் தேதி மோதுகின்றன.
ஸ்பெயின் அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில், இந்த அணியின் நட்சத்திர வீரரும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான லாமின் யமால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
என்னுடைய கருத்தின்படி பிரான்ஸ் அணி யாரையாவது பார்த்தால் பயந்தால் அது எங்கள் அணியாகவே இருக்கும். நாங்கள் ஏற்கெனவே அவர்களை தோற்கடித்துள்ளோம். அதனால், எங்களுக்கு எந்த அணி குறித்தும் பயம் என்பது இல்லை.
நாங்கள் இரண்டு அணிகளுமே தலைசிறந்த அணிகள், உலகத் தரம் வாய்ந்த தேசிய அணிகள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் சிறந்தவர்கள். என்ன நடக்கிறது எனப் பார்போம் என்றார்.
இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் ஒரே கோல் மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் பிரான்ஸ் 16 கோல்களை அடித்து, 2 கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Yamal says France should fear Spain in their much-anticipated World Cup semifinal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.