கேப்டன் ஃபிஞ்ச் 
டி20 உலகக் கோப்பை

ஆஸ்திரேலிய அணியில் ஏழு பேட்டர்கள்: கேப்டன் ஃபிஞ்ச் அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஏழு பேட்டர்கள் இடம்பெறுவார்கள் என்று கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஏழு பேட்டர்கள் இடம்பெறுவார்கள் என்று கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பற்றி ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் கூறியதாவது:

ஏழு பேட்டர்கள், 4 பிரதான பந்துவீச்சாளர்களுடன் நாங்கள் களமிறங்குகிறோம். மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மார்ஷ் ஆகிய மூவரும் இணைந்து நான்கு ஓவர்களை வீசி முடிப்பார்கள் என்கிற நம்பிக்கை உண்டு. ஐக்கிய அரபு அமீரக ஆடுகளத்தில் அவர்கள் நன்றாகப் பந்துவீசுவார்கள் என நம்புகிறோம். 

டேவிட் வார்னரின் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் ஏராளமான ரன்களைக் குவித்துள்ளார். மேலும் நிறைய ரன்கள் எடுக்க அவர் விரும்புவார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக உள்ளார். நிச்சயம் மீண்டும் ரன்கள் குவிப்பார் என அவர் மீது நம்பிக்கை உள்ளது. இந்தப் போட்டியில் பவர்பிளேயில் எந்த அணி நிறைய ரன்கள் குவிக்கிறதோ அந்த அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT