முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் சாரம் அமைக்கும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவைப் பூச்சு பூசுவதற்காக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை

Updated On : 2 மார்ச் 2013, 2:56 am IST
பகிர்:

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவைப் பூச்சு பூசுவதற்காக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலை உப்புக் காற்றால் சேதமடையாமல் இருப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக்கான் என்னும் ரசாயனக் கலவைப் பூச்சு பூசப்படுவது வழக்கம்.

சிலை அமைக்கப்பட்ட பின்னர் 3ஆவது முறையாக ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Advertisement

Advertisement

முதற்கட்டமாக இரும்புக் கம்பிகள் தனிப் படகு மூலம் சிலை வளாகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சாரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

முழுப் பணிகளும் முடியும் வரை திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.