35 லட்சம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்க ரூ. 1,500 கோடி
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ. 1,500 கோடி
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: 2011-12-ம் ஆண்டில் ரூ. 1,361.62 கோடியில் 25 லட்சம் குடும்பங்களுக்கும், 2012-13-ம் ஆண்டில் 1,556 கோடியில் 35 குடும்பங்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டன. மலைப்பகுதிகளில் மின் விசிறிக்குப் பதில் மின் அடுப்புகள் வழங்கப்பட்டன. 2013-14-ம் ஆண்டில் 35 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்க ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.