தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?
நடிகை ஸ்வாசிகா குறித்து...
நடிகை ஸ்வாசிவா நடித்த நூறு சாமி விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகை ஸ்வாசிகா மலையாளத்தில் சில படங்களில் நடித்து ஓரளவு கவனம் பெற்றார். தொடர்ந்து, நாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வைகை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் என்றாலும் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார்.
ஆனாலும், ஸ்வாசிகாவுக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது லப்பர் பந்து திரைப்படம்தான். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் மாமன் படத்தில் நடித்தார். அதுவும் வணிக ரீதியாக நல்ல வசூலைப் பெற்று வெற்றிப்படமானது.
Advertisement
Advertisement
அதற்கு அடுத்து, நடிகர் சூர்யாவுடன் கருப்பு திரைப்படத்தில் நடித்தார். அப்படம் ரூ. 350 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது, இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி என்கிற படத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். அடுத்தடுத்து தொடர் வெற்றிகளில் இருக்கும் ஸ்வாசிகா, இப்படத்திலும் வெல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'Nooru Saami', starring actress Swasiva, is set to release in theaters soon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.