FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விரைவில் வெளியாகும் ஆக்டோபஸ் இணையத் தொடர்!

பிரபல ஓடிடியில் ஆக்டோபஸ் இணையத் தொடர்...

25 வினாடிகள் முன்பு
பகிர்:

தமிழில் உருவான ஆக்டோபஸ் என்கிற தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

தமிழில் ஜீ5 ஓடிடி தற்போது ஆக்டோபஸ் (‘Octopus’) எனும் சஸ்பென்ஸ் திரில்லர் தொடரை உருவாக்கியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர் மர்மங்கள், உணர்வுகளைக் கொண்ட தொடராக எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட தொடராகும். இதில் நடிகர்கள் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

ஒரு இளம் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்த உண்மையை கண்டறிய ஒரு நெருக்கமான அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். இந்த தேடல், மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்து எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மர்மம், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது.

இத்தொடர் ஜீ5 தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. தொடரின் டீசர் விடியோவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Tamil series Octopus is set to be released on OTT soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments