பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு! விரைவில் வெளியாகிறது ஒட்டாரம் திரைப்படம்!
பாலியல் துன்புறுத்தலின் வலியையும், விழிப்புணர்வையும் பேசும் ஒட்டாரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறித்து...
பாலியல் துன்புறுத்தலின் வலியையும், விழிப்புணர்வையும் பேசும் ஒட்டாரம் திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது.
எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் பி. சாமுவேல் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஒட்டாரம். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
படத்தில் கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். யாத்திசை பட நாயகி ராஜலட்சுமி, லப்பர் பந்து படத்தில் நடித்த டி.எஸ்.கே மற்றும் கன்னடத் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் மூனார் ரமேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சி. சத்யா இசையமைக்க, பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யநாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் பாடல்களை விவேக் மற்றும் மோகன்ராஜன் எழுதியுள்ளனர். இரண்டு பாடல்களுக்கு ஷெரிஃப் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மான்குத்திமேடு வனப்பகுதியில் 30 நாட்களுக்கு மேல் கடும் பனிப்பொழிவுக்கு நடுவே படமாக்கப்பட்டுள்ளன.
ஆசியாவிலேயே தூய்மையான காற்று நிலவும் பகுதிகளில் ஒன்றாகக் கூறப்படும் மான்குத்திமேட்டில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னை தண்டையார்பேட்டை பகுதியிலும் சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படத்தின் கதை குறித்து இயக்குநர் ரா. ராமமூர்த்தி கூறுகையில்,
“இது வித்தியாசமான படம் என்பதைத் தாண்டி, கண்டிப்பாக ஒரு விசித்திரமான அனுபவத்தைத் தரும் படமாக இருக்கும். ‘யார் இவர்கள்? இங்கு என்ன நடக்கிறது? நாம் ஏன் நம்மைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோம்?’ என்ற கேள்விகள் படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் தோன்றும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தலின் வலியையும், அது குறித்த விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட கதை இது. ஒரு தனிமனிதன் தனது வாழ்வியல் சுதந்திரத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறான் என்பதையும் காட்சிப்படுத்தும்,” என்றார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெறவுள்ளது.
Ottaram movie is releasing soon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.