FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாறுபட்ட கதையில் நடிக்கும் யாத்திசை பட நாயகி!

ஒட்டாரம் திரைப்படத்தில் நடிக்கும் யாத்திசை பட நாயகி ராஜலட்சுமி.

பகிர்:

யாத்திசை பட நாயகி ராஜலட்சுமி, ஒட்டாரம் திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார்.

எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் பி. சாமுவேல் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஒட்டாரம். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ பட நாயகி ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த டி.எஸ்.கே மற்றும் கன்னடத் திரைப்படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் மூனார் ரமேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

சி. சத்யா இசையமைக்க, எம்.எஸ். பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். சத்யநாராயணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடல்களை விவேக் மற்றும் மோகன்ராஜன் எழுதியுள்ளனர்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மான்குத்திமேடு வனப்பகுதியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, 30 நாள்களுக்கு மேல் கடும் பனிப்பொழிவுக்கு நடுவே படமாக்கப்பட்டுள்ளன.

யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதியாக இருப்பதால், அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு நாட்கள் மிகுந்த சவால்களுடனும், ஒருவித அச்சத்துடனும் நடைபெற்றதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவிலேயே தூய்மையான காற்று நிலவும் பகுதிகளில் ஒன்றாகக் கூறப்படும் மான்குத்திமேட்டில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னை தண்டையார்பேட்டை பகுதியிலும் சுமார் 20 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஒட்டாரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெறவுள்ளது.

summary

Rajalakshmi, the heroine of the film *Yaathisai*, is playing a distinct role in the movie *Ottaram*.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments