2027-ல் அறிமுகமாகும் கவாஸாகி இசட்650 எஸ் பைக்! விலை இதுதான்!
கவாஸாகியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இசட்650 எஸ் இருசக்கர வாகனம் வெளியாகவுள்ளது குறித்து...
கவாஸாகி நிறுவனத்தில் புதிதாக இசட்650 எஸ் இருசக்கர வாகனம் 2027 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ. 7.59 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய இசட்650 இருசக்கர வாகனம் ரூ. 7.26 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், இசட்650 எஸ் இருசக்கர வாகனம் ரூ. 33,000 கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
Advertisement
Advertisement
கவாஸாகி இசட்650 எஸ் இருசக்கர வாகனத்தில் பின்புறம் சற்று நீளமாக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இந்த மாடலில் முன்புறம் சற்று மாற்றப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம் முழுக்க ஒற்றை நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை அல்லது இளம் பச்சை நிறம்.
4.3 அங்குலத்தில் மறுசீரமைக்கப்பட்ட டிஎஃப்டி திரை
ஸ்மார்ட்போன் மூலம் ரேடியோலஜி செயலியில் இணையக்கப்பட்டுள்ளது. இதனால் பயண வழித்தடங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இரட்டை ஏபிஎஸ்
649cc டிவின் என்ஜின், 67 hp திறன் மற்றும் 8,000rpm வேகத்தை வழங்கக்கூடியது.
அதிகபட்சமாக 6,700rpm வேகத்தில் 64Nm டார்க் விசையை வழங்கக்கூடியது.
6 கியர்கள் உடையது.
41mm டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ், 125mm சக்கரம்.
இரட்டை டிஸ்க் கொண்டது.
193 கிலோ எடை உடையது. முந்தைய மாடலை விட 5 கிலோ கூடுதல் எடை உடையது.