FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய நிலவரம்! (நவ. 4)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம். - (கோப்புப்படம்)
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 4) சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அதேநேரத்தில், கடந்த சில வாரங்களாக சரிவைச் சந்தித்துவந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் மூன்றாவது நாளான இன்றும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 4) சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,02,600-க்கும் கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,825-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 200-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

In Chennai, the price of gold jewellery has increased by Rs. 200 per sovereign today (Nov. 4).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments