தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 26)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது பற்றி.....
வாரத்தின் முதல்நாளான இன்று(அக்.26) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயந்துள்ளது.
சென்னை சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,04,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 13,085-க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தபோதிலும், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.220க்கும், ஒரு கிலோ ரூ.2,20,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை தங்கம் விலை சரிவைச் சந்தித்து வந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளிலேயே மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்களும் முதலீட்டாளர்களும் வர்த்தகத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
Gold prices in Chennai have risen today (Oct 26), marking the first day of the week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.